பாலக்காடு, 4 கண்களுடன் காணப்பட்ட தேங்காயை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர். பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியில் வசித்து வருபவர் ஜெயராம். ராணுவ அதிகாரி. இவரது வீட்டு தோட்டத்தில் தென்னை மரம் உள்ளது. இந்த மரத்தில் காய்த்த தேங்காய் ஒன்றை உரித்த போது, மற்ற தேங்காயை விட வித்தியாசமாக இருந்தது. 4 கண் தேங்காய் ஒரு தேங்காயின் வெளிப்புறத்தில் 4 கண் இருந்தது. தேங்காயின் உள்புறத்தில் 2 சிறிய தேங்காய் காணப்பட்டது. வித்தியாசமாக இருந்த இந்த தேங்காயை, அப்பகுதி மக்கள் அங்கு வந்து ஆச்சரியமாக பார்த்து சென்றனர். மேலும் இந்த தேங்காயின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/the-miraculous-coconut-found-with-4-eyes




