மும்பை 2 முன்னாள் கணவர்கள் தனக்கு துரோகம் செய்து விட்டனர் என பிரபல நடிகை பேட்டியில் கூறியுள்ளார். முன்னணி சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக அறியப்படுபவர் அவர். தன்னுடைய கடந்த காலத்தில் நடந்த சோக சம்பவங்களை பற்றியும், வாழ்வில் மோசடி செய்யப்பட்டது பற்றியும் பேட்டி ஒன்றில் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். தனக்கு திறன் உள்ளது அவர், பிறர் கூறும் பொய்களை கண்டுபிடிக்கும் திறன் தனக்கு உள்ளது என்று கூறுகிறார். அவர் வேறு யாருமல்ல. தொலைக்காட்சி தொடர்களில் பிரபலம் வாய்ந்த நடிகை ஸ்வேதா திவாரி தான் அவர். இயக்குநர் கரண் ஜோகர் உடனான நிகழ்ச்சி ஒன்றில் அவர் அளித்த பேட்டியின்போது, தன்னுடைய 2 முன்னாள் கணவர்கள் தனக்கு துரோகம் செய்து விட்டனர் என்றார். அதனால், அந்த 2 திருமணங்களும் முறிந்து விட்டன. 2 பேரையும் துரோகம் செய்த தருணத்தில் கண்டறிந்தேன் என கூறினார். நடிகருடன் முதல் திருமணம் அவருக்கு 1998-ம் ஆண்டு நடிகர் ராஜா சவுத்ரியுடன் திருமணம் நடந்தது. 2007-ல் இந்த ஜோடி பிரிந்தது. இருவரும் விவாகரத்து செய்தனர். 6 ஆண்டுகளுக்கு பின்னர் 2013-ம் ஆண்டில் அபினவ் கோலியை, ஸ்வேதா திருமணம் செய்து கொண்டார். அதுவும் பிரிவில் முடிந்தது. இந்த இரு திருமணங்கள் முடிவுக்கு வந்ததற்கு குடும்ப வன்முறையும், துரோகம் செய்ததும் காரணங்கள் என முன்னாள் கணவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதிர்ச்சி செய்தி அப்போது கரண் குறுக்கிட்டு, ஒரு பொய்யரை கண்டுபிடிக்கும் திறன் உங்களுக்கு கிடையாது என்றார். ஆனால் திவாரியோ, 2 கணவர்களையும், அவர்கள் எனக்கு துரோகம் செய்த தருணத்திலேயே நான் கண்டுபிடித்தேன் என்று கூறினார். ஆனால், முன்னாள் கணவரான ராஜா சவுத்ரி பேட்டி ஒன்றில் கூறும்போது, தனக்கு எதிரான குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்துள்ளார். ஸ்வேதாவும், சிஜன் கானும் ஓர் உறவில் இருந்தனர் என்றார். ஸ்வேதாவுடன் ஒன்றாக நடித்த சிஜன் கானின் வீட்டில் அவர்கள் இருவரும், தனிமையில் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் உல்லாசத்தில் உள்ளனர் என தன்னுடைய நண்பர் ஒருவர் தன்னிடம் கூறினார். அதனை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இதுபற்றி சிஜன் கானிடம் கேட்டபோது அவரும் அதனை உறுதிப்படுத்தினார் என கூறினார். 3-வது திருமணம் 2 கணவர்களையும் ஸ்வேதா பிரிந்து விட்டார். அதனால் தற்போது தனியாக அவர் வசித்து வருகிறார். எனினும், நடிகர் விஷால் ஆதித்ய சிங் என்பவரை 3-வது திருமணம் செய்து கொள்ள போகிறார் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. ஆனால், எங்களுக்கு இடையே நட்புதான் உள்ளது என அவர் அதனை மறுத்து விட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/two-ex-husbands-betrayal-popular-actress-sensational-interview




