ஹராரே, இந்தியா- ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 219 ரன் கள் குவித்தது. பின்னர், இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், தோல்வி குறித்து ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராசா கூறுகையில், 'எங்கள் பந்துவீச்சாளர்கள் சில நேரங்களில் நன்றாக பந்துவீசியதாக நான் நினைக்கிறேன். மற்றபடி எல்லா சிறப்பும் இந்தியாவையே சாரும். அவர்கள் ஆடிய சில ஷாட்கள் மற்றும் அவர்கள் வெளிக்காட்டிய திறமை நிச்சயமாக பாராட்டத்தக்கது. பீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் தேவை. பந்து வீச்சாளர்களுக்கு பக்கபலமாக பீல்டிங் சிறப்பாக அமைந்தால் அது எதிரணிக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும். அதே சமயம் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. அவர்கள் ஆடிய விதத்தில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். கடந்த இரு ஆட்டத்திலும் நான் போதிய ரன் எடுக்காமல் ஏமாற்றி விட்டேன். அணிக்கு எனது ரன்கள் தேவைப்படுவதால், அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக் கிறது. அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு பங்களிப்பு அளிக்க முயற்சிப்பேன்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/defeat-against-india-what-the-zimbabwe-captain-said




