சென்னை, பராமரிப்பு காரணமாக சென்னை சென்டிரல் -சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பெதபரியா- நாயுடு பேட்டை இடையே இன்று (வியாழக்கிழமை) மற்றும் 5 ஆகிய தேதிகளில் மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரையில் (6 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- பயணிகள் ரெயில் ரத்து சென்னை சென்டிரலில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சூலூர் பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் வரும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-sulurpet-passenger-train-cancelled-2




