கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த வழக்கில் தொடர்புடைய த.வெ.க. பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண் தூக்குப்போட்டு தற்கொலை கன்னியாகுமரி மாவட்டம், மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், துபாயில் எலக்ட்ரீசியனாக உள்ளார். இவருடைய மனைவி அனிஷா (வயது 33) தனியார் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12-ந்தேதி அனிஷா, தன் கணவருக்கு “இது நான் அவன் மேல விருப்பப்பட்டு செய்தது கிடையாது. என்னை அவன் வாழ விடமாட்டான்." என்று வீடியோ மூலம் தகவலை அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார். த.வெ.க. பிரமுகர் கைது செய்து சிறையில் அடைப்பு போலீசார் விசாரணையில் அனிஷா வீடியோ தகவலில் குறிப்பிட்ட நபர், த.வெ.க. பிரமுகர் சங்கர் என்று தெரியவந்தது. சென்னை பல்லாவரத்தில் நண்பர் வீட்டில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நேற்று அவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-tvk-leader-arrested-in-woman-suicide-case




