சென்னை, 1944-ம் ஆண்டு நடந்த பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்கும், இந்த கதைக்கும் சம்பந்தமில்லை. 1970-ல் நடக்கும் இந்தக்கதையில் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காத விரக்தியில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வரு கிறார், வெற்றி. இதற்கிடையில் வெற்றிக்கு, அந்த ஊரில் இருக்கும் பிரிகிடாவுடன் காதல் ஏற்படுகிறது. அந்த காதல் திருமணம் கைகூடுகிறது. தன் காதல் மனைவிக்காக இனி திருட்டு தொழிலை கையில் எடுக்கக்கூடாது என்று வெற்றி முடிவு செய்கிறார். இந்த சூழலில் எதிர்பாராமல் நடக்கும் ஒரு சம்பவம். வெற்றி வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது. சூழ்நிலையே வெற்றியை தூக்கு தண்டனை கைதியாக்கி விடுகிறது. அந்த சம்பவம் என்ன? வெற்றிக்கு தூக்கு தண்டனை கிடைத்ததா? திருந்தி வாழ நினைக்கும் அவரது வாழ்வு தப்பித்ததா? என்பதே மீதி கதை. எதார்த்தமான நடிப்பை காட்டி ஓரளவு 'ஸ்கோர்' செய்துள்ளார் வெற்றி. முந்தைய படங்களை ஒப்பிடுகையில் அவரது நடிப்பு மேம்பட்டிருக்கிறது. அழுத்தமான நடிப்பால் கவர்கிறார், பிரிகிடா. 'எமோஷனல்' காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். மாறன், சரவணன், லிசி ஆண்டனி, அருவி மதன், கன்யா பாரதி, சுப்ரமணிய சிவா உள்ளிட்டோரின் நடிப்பும் சிறப்பு. எம்.வி.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவில் காட்சிகளில் எதார்த்தம் பளிச்சிடுகிறது. தர்புகா சிவாவின் இசை ஓகே. ரகம். எதார்த்தமான காட்சிகள் படத்துக்கு பலம். கதாபாத்திரங்களின் நடிப்பை விட படத்தின் வசனங்களே கவனிக்க வைக்கின்றன. 2-ம் பாதியில் நாடகத்தனமாய் நகரும் காட்சிகள் யோசிக்க வைக்கின்றன. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். அதிக உரையாடல்களும் சலிப்பை தட்டுகின்றன. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நியாயமா? தவறாக வழங்கப்படும் தண்டனை எதுமாதிரியான தாக்கங்களை சமூகத்தில் ஏற்படுத்தும்? இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? என்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து, படத்தின் இறுதியில் நம்மையே தீர்ப்பு சொல்ல வைத்திருக்கிறார், இயக்குனர் தயாள் பத்மநாபன். லட்சுமிகாந்தன் கொலைவழக்கு விறுவிறுப்பு போதாது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/movie-review/lakshmikanthan-kolai-vazhakku-film-review




