ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளுக்கு மிகவும் பிஸியான மாதமாக அமைந்திருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கின்றன. Vishal - Magudam அதுமட்டுமல்லாமல், கடந்த மாத ரிலீஸிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட படங்களும் இம்மாதம் வெளியீட்டுக்கு வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போமா. ஜி.டி.என்: இந்தியாவின் 'எடிசன்' என்றழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் பயோபிக் படம்தான் இந்த 'ஜி.டி.என்'. நடிகர் ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன், ப்ரியாமணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. டி.சி: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகராக அறிமுகமாகும் 'டி.சி' படம் கடந்த மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டு ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியாகிறது. 'கேப்டன் மில்லர்'க்குப் பிறகு அருண் மாதேஷ்வரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். நடிகை வமிகா கேபியும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஆக்ஷன் தெறிக்கும் டிரெய்லரும் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. Lokesh Kanagaraj - DC மகுடம்: நடிகர் விஷால், இயக்குநராக அவதாரமெடுக்கும் 'மகுடம்' படம் கடந்த மாதம் வெளியாகும் எனச் சொல்லியிருந்தார்கள். ஆனால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தாமதமானதால் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மூன்று கெட்டப்புகளில் விஷால் இந்தப் படத்தில் நடித்திருக்கிறாராம். Hi: பாடலாசிரியராகக் கவனம் ஈர்த்த இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் 'Hi' படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் பட்டறையில் பயின்று வந்தவர் இவர். இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜென் மார்டின் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். விஸ்வநாதன் & சன்ஸ்: 'லக்கி பாஸ்கர்' வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் படம் இந்த 'விஸ்வநாதன் & சன்ஸ்'. சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா, ரவீனா டாண்டன் ஆகியோர் இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். `விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் I'm Game: 'ஆர்.டி.எக்ஸ்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நஹாஸ் இத்யத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் துல்கர் சல்மான், கயாடு லோஹர், கதிர், மிஷ்கின் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். சூதாட்டத்தைப் பற்றிய கதையை ஆக்ஷன் - த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர். இந்தப் படம் ஆகஸ்ட் 20-ம் தேதி திரைக்கு வருகிறது. டாக்ஸிக்: கே.வி.என் நிறுவனத்தின் தயாரிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் 'டாக்ஸிக்' படம் பல தடைகளுக்குப் பிறகு இம்மாதம் 26-ம் தேதி திரைக்கு வருகிறது. இரு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன இப்படம், இறுதியாக இம்மாதம் வெளியாகிறது. நயன்தாரா, ருக்மினி வசந்த், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/august-2026-tamil-movie-releases-gtn-dc-magudam-toxic




