ளைதிண்டுக்கல், 20வது லீக் ஆட்டத்தில் திருச்சியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவுசெய்தது கோவை. டிஎன்பிஎல் 10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 201 ரன்கள் அதன்படி, இத்தொடரில் இன்று நடைபெற்ற 20வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸை வென்ற திருச்சி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாலசுப்ரமணியம் சச்சின் 77 ரன்கள் எடுத்தார். 85 ரன்களில் சுருண்ட திருச்சி இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி களமிறங்கியது. ஆனால் கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திருச்சி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் திருச்சி அணி 16.1 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கோவை கிங்ஸ் அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-kovai-registers-second-win-by-defeating-trichy




