கீவ் ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 10 பேர் பலியாகி உள்ளனர். உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. போரால் வீரர்கள் உள்பட இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர். மத்தியஸ்த பேச்சுவார்த்தை போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன், டிரம்ப் பேசினார். எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. ஏவுகணைகள், டிரோன்கள் இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போரானது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் நகரங்கள் மீது இன்று ஏவுகணைகள், டிரோன்கள் கொண்டு ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. வெடிகுண்டுகளையும் வீசியுள்ளது. இதில், 10 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றி உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறும்போது, வடகொரியாவிடம் இருந்து ரஷியா புதிதாக ராணுவ உதவியை பெறுகிறது. இதில், ஜபோரிஜ்ஜியா நகரில் 7 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். நிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரின் மத்திய பகுதியில் டிரோன்கள் கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தியதில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலியானார்கள் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/ten-killed-in-russian-missile-strike-in-ukraine




