ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘வந்தே மாதரம்’ முழுப் பாடலும் இசைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு தேசிய மாநாட்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால், இந்தியா கூட்டணிக்குள் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவமும் இசைக்கப்பட்டது. அப்போது தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், விழாவில் ‘வந்தே மாதரம்’ முழுப் பாடல் இசைக்கப்பட்ட வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். மீண்டும் கருத்து வேறுபாடு மேலும், வரிகள் நீக்கப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடலை மட்டுமே இசைக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சியும் ஏற்றுக்கொண்டு, அதன்படி செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டுக்கு தேசிய மாநாட்டு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் பஷிர் அகமது கூறுகையில், “வந்தே மாதரம் பாடலை எப்போது பாட வேண்டும், எவ்வளவு பாட வேண்டும் என்பதை கூட்டணி கட்சிகள் எங்களுக்கு உத்தரவிட வேண்டாம். இதை யாராலும் எங்கள் மீது திணிக்க முடியாது. அனைத்தும் மக்களின் விருப்பத்தைப் பொறுத்தது. மக்களின் மீது எதையும் திணிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார்.இதனால், ‘வந்தே மாதரம்’ பாடல் விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முடிவு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், சுதந்திர தின விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நடைபெற்ற தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியின்போது வழக்கத்துக்கு மாறாக வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சோனியா காந்தி, வந்தே மாதரம் பாடுவதை நிறுத்துமாறு சைகை காட்டியதாக விமர்சனம் எழுந்தது. அடுத்த இரு நாட்களில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், 1937-ம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சர்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்திகள் மட்டுமே பாடப்படும் என முடிவு எடுக்கப்பட்டது காங்கிரஸின் இந்த முடிவை மத்தியில் ஆளும் பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/clash-between-national-conference-and-congress-over-the-singing-of-the-full-vande-mataram-song




