காஞ்சிபுரம், ஆடி கருட சேவை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற இருந்த ஆடி கருட சேவை உற்சவம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த 3-ந்தேதி உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றபோது, கவசங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியின்போது பழமையான உற்சவர் சிலையில் சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை இதையடுத்து, சிலையை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசின் பல்வேறு நிலைகளில் அனுமதி பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ஆடி கருட சேவை உற்சவத்தை நடத்த முடியவில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இன்னும் சில நாட்களில் தேவையான அனுமதிகள் கிடைக்கும் என்றும், அதன்பின் உற்சவர் சிலை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-varadaraja-perumal-aadi-garuda-service-cancelled-due-to-damage-to-the-festival-idol




