சென்னை, பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய தலைமைச் செயலக கட்டுமான பணிக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது. புதிய தலைமைச் செயலகம் தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு, சென்னை-பட்டினப்பாக்கத்தில், ரூ.1,200 கோடி மதிப்பில், புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை, சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் வெளியிட்டார். இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வாழ்வாதாரம் மேலும் இந்த திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடலோர பகுதியில் இத்திட்டம் வருவதால், தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழில் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தி.மு.க. மனு தாக்கல் இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதியான பட்டினபாக்கத்தில் கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், சுற்றுச்சூழல், கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டதா என்ற தகவல் இல்லை என்றும், நெரிசல் மிகுந்த பகுதியில் தலைமைச் செயலகம் கட்டினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டு மயிலை தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலு, சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-constructing-the-new-secretariat-at-pattinapakkam-dmk-files-case-in-high-court




