டாக்கா, வங்காள தேசத்தின் புதிய அதிபராக மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர், இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்க உள்ளார். புதிய அதிபர் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 1991-ம் ஆண்டுக்கு பிறகு அதிபர் பதவி ஒருமனதாகவே நிரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் 35 ஆண்டுகளில் இல்லாத வகையில், புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான விறுவிறுப்பான தேர்தல் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. 255 வாக்குகள் இதில் ஆளும் 'வங்கதேச தேசியக் கட்சி' சார்பில் போட்டியிட்ட 78 வயதான மூத்த தலைவர் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் அமோக வெற்றி பெற்று, நாட்டின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் ஆலம்கீர் 255 வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர் ஒலி அகமது 88 வாக்குகளை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தார். பதவியேற்பு உடல்நலக் குறைவால் முன்னாள் அதிபர் முகமது சகாபுதீன் கடந்த மாதம் ராஜினாமா செய்ததை அடுத்து இந்த தேர்தல் நடத்தப்பட்டது. அதிரடி வெற்றி பெற்றுள்ள புதிய அதிபர் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர், இன்று (வெள்ளிக் கிழமை) மாலை அதிபர் மாளிகையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் முறைப்படி பதவியேற்க உள்ளார். யார் இந்த இஸ்லாம் ஆலம்கீர்? அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீ, வங்கதேச தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராக செயல்பட்டவர். கடந்த 2016 முதல், அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்படும் வரையில் இந்தப் பதவியை அவர் கவனித்தார். தற்போது இந்த கட்சி தான் அந்நாட்டில் ஆட்சியில் உள்ளது. கடந்த 1990 முதல் வங்கதேச தேசிய கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பொருளியல் பட்டம் பெற்றவர். ஆசிரியராக பணியாற்றி உள்ளார். கட்சி மற்றும் ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/bnps-mirza-fakhrul-islam-alamgir-elected-as-bangladeshs-new-president




