திருச்சி, தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் யாரையும் நான் தவறாக பேசவில்லை; காவிரி பிரச்சினையை அவையில் எழுப்பக்கூடாது என்பதற்காக இந்த அரசு டைவர்ட் செய்துள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறினார். தவெக அரசு திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:- திமுக தலைவரின் உத்தரவை ஏற்று தஞ்சையில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம். விவசாயிகளுக்கு தவெக அரசு செய்த துரோகங்கள், பொய் வாக்குறுதிகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். நான் யாரையும் தவறாக பேசவில்லை, பேசாத ஒன்றை கட் காபி செய்து பரப்பி உள்ளனர். திசை திருப்பும் முயற்சியாக, நான் பேசாத ஒன்றை பேசியதாக திரித்து வீடியோவை பரப்பி உள்ளனர். காவிரி பிரச்சினையை அவையில் எழுப்பக்கூடாது என்பதற்காக இந்த அரசு டைவர்ட் செய்துள்ளது. இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை தீவிரவாதியை போல், என்னை 400 கி.மீ.க்கு அழைத்து சென்று செங்கிப்பட்டியில் வைத்து விசாரணை நடத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்கு தரம்கெட்ட அரசு கைது செய்துள்ளது. இதற்கு நான் அஞ்சவில்லை. எனக்கு மனைவி, மகள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களையும் எனது தாயாக, சகோதரிகளாக நான் பார்க்கிறேன்.எந்த தவறான எண்ணத்திலும் பெண்களை தரம் தாழ்த்தி பேச வேண்டும் என்று நான் எண்ணவில்லை. ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் நான் பேசவில்லை, சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன். பேசுவேன். ஒருசில தலைவர்கள் நான் பேசியதை ஆராயாமல் கண்டனம் தெரிவித்தது எனக்கு வருத்தம் தருகிறது. நான் முதல்-அமைச்சரை போல ஓடுகாலி அல்ல அரசின் பொய் வழக்கு போட்டு பயமுறுத்து பார்க்கின்றனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. இதே திருச்சி விமான நிலையத்தில் புறமுதுகு காட்டினார் முதல்-அமைச்சர் விஜய். வழக்கு போட்டால் தன்னை போல பயப்படுவேன் என நினைத்துவிட்டார். பொய் வழக்கை சட்டமுறைப்படி எதிர்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/they-took-me-away-and-interrogated-me-like-a-terrorist-udhayanidhi-interview




