முதல்-அமைச்சர் விஜய்யின் கரூர் பயணத்திற் கான ஏற்பாடுகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியா கும். நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் மனுக் கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல் வதை கண்டு எதிர்க்கட்சிகள் ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரிய வில்லை. எப்படியாவது அவரது கரூர் பயணத்தை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சி.பி.ஐ. விசாரணை குறித்து பேசும் அவர்கள், தங்க ளது ஆட்சிக்காலத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தடை கோரியவர்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை. தற்போது எப்.ஐ.ஆர்.-ஐ கூட முழுமையாக படிக்காமல், சுப்ரீம் கோர்ட்டின் நேரத்தை வீணடித்து உள்ளனர். ஆட்களே இல்லாத நிலை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து உள்ளன. இந்த இரு கட்சிகளும் தமிழகத்தில் நாளுக்கு நாள் தேய்ந்து வருகின் றன. இன்னும் ஒரு சில மாதங்களில் வெறும் 10 முதல் 15 பேரை தவிர இந்த இரு கட்சிகளிலும் ஆட்களே இல்லாத நிலை ஏற்படும். அந்த அளவுக்கு தமிழக மக்கள் அவர்களை புறக்கணித்து, எங்களை ஆதரித்து வருகிறார்கள். ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் என் பது அனைத்து தரப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அதற்கு ஏற்ப அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. குறைந்தபட்ச செயல்திட்டம் எங்களது கூட்டணியில் உள்ள திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களு டன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் அனைத்தையும் கலந்து பேசி இணக்கமாக செயல்பட்டு வருகிறோம். முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் விரைவில் அடுத்தகட்ட அனைத்து கட்சி தலைவர் கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் த.வெ.க. கூட்டணிக்கான பெயர் மற்றும் குறைந்தபட்ச செயல் திட் டம் ஆகியவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/name-and-minimum-common-program-of-the-tvk-alliance-to-be-released-minister-nirmalkumars-statement




