மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு அந்தக் கட்சி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணிக்குச் சென்றுவிட்டனர். இன்று கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை காலையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். சிலர் அலுவலகத்தில் இருந்த டிவி மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர்களைத் தூக்கிச்சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தனது X தளத்தில் இது தொடர்பான வீடியோவைப் பகிர்ந்து, "அதிகாலை 4.30 மணியளவில், கொல்கத்தாவின் மையத்தில் உள்ள எங்கள் கட்சி அலுவலகத்தை ஆயுதங்களுடன் பாஜக குண்டர்கள் முற்றுகையிட்டனர். பொருட்களை எடுத்துச்செல்லும் மர்ம நபர்கள் அவர்கள் எங்கள் கட்சி தொண்டர்களைத் தாக்கினர், அவர்களின் தொலைபேசிகளைப் பறித்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். வளாகத்தைச் சூறையாடி மின்னணு உபகரணங்களைச் சேதப்படுத்தினர். கொல்கத்தா காவல்துறை எங்கே இருந்தது? கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், எங்கள் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் பலமுறை போன் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் எந்தப் பதிலும் இல்லை. இது மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் அபிஷேக் பானர்ஜி பகிர்ந்த வீடியோக்களில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்த நபர்கள் டிவி திரைகள் மற்றும் பிற உபகரணங்களை அலுவலகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்வதைக் காட்டுகிறது. ஆனால் இத்தாக்குதலில் தங்களது கட்சிக்குத் தொடர்பு இல்லை என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தேவையில்லாமல் பா.ஜ.க மீது குற்றம் சாட்டுவதாகவும் பா.ஜ.க தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா போலீசார் தெரிவித்துள்ளனர். TVK-வின் பிரதமர் வியூகம் - சைலண்ட் விஜய். முஷ்டி முறுக்கும் காங்கிரஸ்! BJP-யின் மூவ் என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/unidentified-individuals-vandalized-tmc-office-in-kolkata-and-made-off-with-items




