சென்னை, தமிழக இளைஞர்களை தேச விரோதிகளாக மாற்ற ஏதேனும் பயங்கரவாத இயக்கம் பின்னிருந்து செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். குண்டு வெடிக்கும் என மிரட்டல் இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- “ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்த நபர்களை தவெக அரசு தீர விசாரிக்க வேண்டும்! “பாரத் மாதா கி ஜெய் என்று சொன்னால் ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்" என இரு இளைஞர்கள் காவல் துறையினர் முன்பே மிரட்டல் விடும் காணொளியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். சுதந்திர இந்தியாவில் "பாரத் மாதா கி ஜெய்" முழக்கத்தை கேட்டு கொதித்தெழும் அளவிற்கு இந்த இளைஞர்களின் மூளை எவ்வாறு சலவை செய்யப்பட்டது என மனம் குழம்புகிறது. தைரியம் கொடுத்தது யார்? சுற்றிலும் காவல்துறையினர் இருக்கும் போதே பயங்கரவாத தொனியில் மிரட்டும் அளவிற்கு இவர்களுக்கு தைரியம் கொடுத்தது யார்? தமிழக இளைஞர்களை தேச விரோதிகளாக மாற்ற ஏதேனும் பயங்கரவாத இயக்கம் பின்னிருந்து செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்து சென்றுவிட்டு, பின்பு விடுதலை செய்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அந்த இளைஞர்களின் பின்னணியையும் அவர்களின் தீவிரவாத சிந்தனையையும் காவல்துறையினர் முறையாக தீர விசாரிக்க வேண்டும். மேலும், தமிழகத்தின் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் நேராத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசை தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-individuals-who-issued-a-threat-that-a-bomb-would-explode-in-srivilliputhur-must-be-thoroughly-interrogated-nainar-nagendran




