ஜபல்பூர், மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியரின் ஒரே மகன் 21 வய தில் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்தார். இதனால் சோகத்தில் மூழ் கிய தம்பதியர். செயற்கை கருத்தரிப்பு (ஐ.வி.எப்.) முறையில் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினர். ஆனால், பெண்ணுக்கு 52 வயதா கிவிட்டதால், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க சட்டப்படி இயலாது எனக்கூறி மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. இதையடுத்து தம்பதியர் மத்தியபிரதேச ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஷால் மிஸ்ரா அதிரடி தீர்ப்பளித்தார். "ஒரு பெண் உடல்ரீதியாக தகுதியுடன் இருக்கும்போது, வெறும் வயதை மட்டும் காரணம் காட்டி அவருக்கு தாய்மை உரிமையை மறுக்கக் கூடாது. சட்டத்தை மிகவும் வளைக்காமல் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்" என்று கூறி, அவர்கள் ஐ.வி.எப். சிகிச்சை பெற அனுமதி வழங்கி உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/52-year-old-woman-granted-permission-to-conceive-via-artificial-insemination




