சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் கடந்த மே மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டது. அதன்படி, கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடும்படி, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் கடந்த மாதம் 1-ந்தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார். இதற்கிடையே மாநில தகவல் ஆணைய உத்தரவையும், தனியார் பள்ளிகள் இயக்குனர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்யக்கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பழனியப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, “தனியார் பள்ளிகள் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் வராது என்ற போதும், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி நியாயத் தன்மையை வெளிப்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-mandatory-to-display-tuition-fees-on-notice-boards-high-court-orders-private-schools




