புதுடெல்லி, இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி போனில் வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடியின் வாழ்த்து மைக் மூலம் ஒளிபரப்பானது. 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் ஐதராபாதை தலைமையிடமாகக் கொண்டு, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் செயல்படுகிறது. 'விக்ரம்- எஸ்' என்ற ராக்கெட்டை 2022ல் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிய நம் நாட்டின் முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையை இந்நிறுவனம் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது சிறிய செயற்கைக்கோள்களை புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட 'விக்ரம்-1' என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இதை சோதனை முயற்சியாக ஏவ, அதற்கான பணிகள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்தன. இந்நிலையில் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 11.30 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், சற்று தாமதமாக 12.05 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இளைஞர்களின் மிகப்பெரிய வெற்றி இந்தநிலையில், விக்ரம் 1 திட்டத்தின் வெற்றி இந்திய இளைஞர்களின் மிகப்பெரிய வெற்றி என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி போனில் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி தெரிவித்த வாழ்த்து செய்தியில், வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் பெருமை உச்சத்திற்கு சென்றுள்ளது. இந்திய இளைஞர்களின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இன்றைய "மிஷன் ஆகமன்" (வருகை) மேலும் தொடர வேண்டும். நாம் தற்சார்பு அடைய முடியும் என்பதை இந்தத் திட்டம் நிரூபிக்கிறது என்றார். மேலும் தம்மை சந்திக்க வரும்படி விக்ரம் 1 ராக்கெட் குழுவினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். தொடர்ந்து தாம் எழுதிய வந்தே மாதரம் குறித்த கடிதம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். 100 சதவீதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விக்ரம் ராக்கெட். விண்வெளி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கிய பிரதமருக்கு ஸ்கைரூட் குழு நன்றி தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/pm-modi-hails-success-of-countrys-maiden-pvt-rocket-calls-it-example-of-atmanirbharta-push




