ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ராமஸ்வரம் அருகே உள்ள கரையூர் பகுதியில் போலீசார், தமிழ்நாடு வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியக அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். 38 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் இந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட 38 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ. 2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டதா? கடல் அட்டைகளை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-38-kg-banned-sea-cards-seized




