புதுடெல்லி, காவிரி நீர் திறக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்த மனு வரும்13-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரை, ஆக.3ம் தேதி பெங்களூருவில் சந்தித்து பேச, தமிழக முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டு இருந்தார். இதற்காக, கர்நாடகா முதல்-மந்திரிக்கு கடிதம் அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதலும் பெறப்பட்டு இருந்தது. சூழ்நிலை சரியில்லாததால், முதல்-அமைச்சர் விஜய் பெங்களூரு வருவதை தவிர்க்க வேண்டும் என, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். வரும் 13ம் தேதி விசாரணை இதனையடுத்து கர்நாடகத்தின் அலட்சிய போக்கால், காவிரியை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பு பாசன ஆண்டில் 26,954 டிம் சி நீர் பற்றாக்குறையை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும். ஆகஸ்12குள் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க வேண்டும் என தமிழகத்திற்கு உரிய நீர் திறக்க, கர்நாடகாவிற்கு உத்தரவிட வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டுமென தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்பு தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்தநிலையில், காவிரி நீரைக் கர்நாடக அரசு திறந்துவிட உத்தரவு அளிக்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மனுவோடு, திமுக தாக்கல் செய்துள்ள மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/cauvery-water-case-hearing-in-supreme-court-on-13th




