தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் எதிரொலியாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று விடுமுறை தினம் என்ப தால் ஒரு சில சுற்றுலா பணிகள் மற்றும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். குளிக்க தடை நேற்று மதியத்திற்கு மேல் மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதிக் குள் பலத்த மழை பெய்ததால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிக ளுக்கும் நீர்வரத்து திடீரென அதிகரித்தது. குறிப்பாக ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டியதால் அங்கு மாலை 6 மணி முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அதேபோன்று மெயின் அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட தால் இரவு 8 மணி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற் றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.இதுதவிர கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, பாப்பான்குளம், மயிலப்பபுரம், ஆம்பூர், தென்காசி, திரவியநகர், மத்தளம் பாறை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெயில் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-courtallam-waterfalls-increases-tourists-banned-from-bathing




