சத்தியமங்கலம், காட்டு யானைகள்சத்தியமங்கலம் அருகே ஆசனூர் சாலையில் பழுதாகி நின்ற லாரியை காட்டு யானைகள் முற்றுகையிட்டு கரும்புகளை ருசித்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சர்க்கரை ஆலைகள் தற்போது தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கிருந்து லாரிகள் மூலம் கரும்புகள் ஏற்றப்பட்டு, இந்த வனப்பாதை வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். காட்டு யானைகள் லாரிகளில் செல்லும் கரும்பின் வாசனை பிடித்து, காட்டு யானைகள் அடிக்கடி சாலைக்கு வந்து லாரிகளை வழிமறித்து கரும்புகளை பறித்து சுவைப்பது தொடர்கதையாகி வருகிறது. பழுதாகி நின்ற கரும்பு லாரி இந்த நிலையில், நேற்று அதிகாலை ஆசனூர் அருகே தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி திடீரென பழுதாகி சாலையோரம் நின்றது. யானைகள் முற்றுகை அப்போது வனப்பகுதியில் இருந்து பிளிறியபடி வந்த காட்டு யானைகள் கூட்டம், பழுதாகி நின்ற லாரியை முற்றுகையிட்டன. பின்னர் லாரியின் அருகே சென்ற யானைகள், தங்களது தும்பிக்கையை நீட்டி, லாரியில் இருந்த கரும்பு கட்டுகளை ஒவ்வொன்றாக பறித்து ஆவலோடு ருசிக்க தொடங்கின. போக்குவரத்து பாதிப்பு நெடுஞ்சாலையின் ஓரம் லாரியை யானைகள் சூழ்ந்து கொண்டு கரும்புகளை காலி செய்ததால், அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரும்புகளை ருசித்து யானைகள் வயிற்று பசி தீர கரும்புகளை ருசித்து தின்ற காட்டு யானைகள், நீண்ட நேரத்திற்கு பிறகு மெதுவாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றன. அதன் பின்னரே வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephants-enjoy-sugarcane-from-stranded-truck-near-sathyamangalam




