சென்னை 157 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 136 கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழக அரசு சம்பள உயர்வை அறிவித்தது. இதனால், நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த கூடுதல் வசூல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கூடுதல் வசூல் குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பணியிடை நீக்கம் கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களின் விவரம் அவர்களின் பணிப் பதிவேட்டில் பதிவாகும். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது முதன்முறை கண்டறியப்பட்டால் ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. எச்சரிக்கை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது 2வது முறையாக கண்டறியப்பட்டால் 3 மாதம் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். 3வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். 3வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. புகார் சேவை மையம் எனினும் சில இடங்களில் முறைகேடுகள் தொடர்ந்தன. கூடுதல் வசூல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்க, தமிழக அரசு அண்மையில் பிரத்யேகப் புகார் சேவை மையத்தைத் தொடங்கியது. இந்த மையத்துக்கு வந்த ஏராளமான புகார்களை ஆய்வு செய்த அதிகாரிகள், கள சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல்கட்டமாக 67 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் 150 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கடந்த 2 நாட்களில் மட்டும் 217 பேர் மீதான இந்த அதிரடி நடவடிக்கை, டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் இந்தநிலையில், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கடை வாடகை - மின் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளை அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிவிட்டால், இன்று முதல் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெற மாட்டோம் எனத் தெரிவித்தனர். இவர்களின் போராட்டம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 137 கடைகளும் இன்று(செப். 4) அடைக்கப்பட்டுள்ளன. நேற்று சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திடீரென எந்த முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை தடுக்கும் நடவடிக்கையில் ஏற்படும் செலவினத்தை அரசே ஏற்க வலியுறுத்தியதாக தெரிகிறது. காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திலும் தங்கள் சொந்த காசை செலவிடவேண்டியதாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர். டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை இந்தநிலையில், பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக 157 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 136 கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தில் உள்ள ஊழியர்களின் விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் சேகரித்து வருகிறது. அவர்கள் மீது சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்வது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/collection-of-details-of-tasmac-employees-who-participated-in-protests-across-tamil-nadu




