கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ருக்மணி வசந்த், "சென்னைக்கு வந்து ரொம்ப நாளாச்சு. ‘டாக்ஸிக்’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஒரு படம். ருக்மணி வசந்த் இவ்ளோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்துக்காக சென்னை வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்தப் படத்துக்கும் உங்களுடைய அன்பான வரவேற்பைக் கொடுங்க. தமிழ்நாட்டு மக்கள் காட்டும் இந்த நிபந்தனையற்ற அன்புக்கு எவ்வளவு முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது. இயக்குநர் கீது மேடம், இப்படி ஒரு படத்தை உருவாக்க துணிச்சலும் சப்போர்ட்டும் ரொம்ப முக்கியம். இந்த மேடையில் இருக்கும் அனைவருக்கும், படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இறுதியாக, அன்பு ஆடியன்ஸ். உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி" என்று பேசியிருக்கிறார். நடிகர் யஷ் பேசும்போது சரிந்து விழுந்த ஸ்பீக்கர்; 'Toxic' பட விழாவில் விபத்து; மாணவர்கள் காயம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/rukhmini-vasanth-speech-at-toxic-movie-pre-release-event




