கோவை, காலை உணவு கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு பொருட்காட்சி நடைபெறும் வ.உ.சி. மைதானத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இந்த பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் ஒரு தூய்மை பணியாளரின் உணவில் கருப்பு நிற சிறிய வண்டு இருந்தது. இதை கண்டு தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ, அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சியின் சுகாதரத்துறை அதிகாரிகள் கூறும்போது, அரசு பொருட்காட்சி நடைபெறும் இடத்தில் வேலை செய்த தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலை உணவு வழங்கப்படவில்லை. தனியார் சார்பில் வழங்கப்பட்டு இருக்கலாம். அதுகுறித்து விசாரிக்கப்படும் என்றனர். இதுபோன்று கடந்த மே மாதம் கோவை மாநகராட்சி 91-வது வார்டு போத்தனூர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் புழு கிடந்தது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/black-beetle-found-in-food-served-to-sanitation-workers-officials-investigate




