Doctor Vikatan: என் வயது 58. எனக்கு கடந்த சில மாதங்களாக மூட்டு வலி இருக்கிறது. முழங்கால் மூட்டுகளில் தேய்மானம் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். அறுவை சிகிச்சை இல்லாமல் இதைச் சரி செய்ய முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பு, முழங்கால் மற்றும் தண்டுவட சிறப்பு மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான நாவலடி சங்கர். எலும்பு, முழங்கால் மற்றும் தண்டுவட சிறப்பு மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான நாவலடி சங்கர் முதுமையின் காரணமாக ஏற்பட்ட தீவிரமடைந்த முழங்கால் தேய்மானத்திற்கு (Advanced Knee Osteoarthritis) அறுவை சிகிச்சை இல்லாத மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பது சிக்கலான ஒரு விஷயம். இதில் ரீஜெனரேட்டிவ் (regenerative) சிகிச்சை முறைகள் இருந்தாலும், அவற்றின் முடிவுகள் உங்களது பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்க்க அல்லது தள்ளிப்போட ஆர்த்தோபயாலஜிக்ஸ் (Orthobiologics) எனப்படும் பிஆர்பி (PRP - Platelet-Rich Plasma) மற்றும் பிஎம்ஏசி (BMAC - Bone Marrow Aspirate Concentrate) போன்ற தண்டுவடம் சார்ந்த ஸ்டெம் செல் (stem cell) சிகிச்சைகள் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சிகிச்சைகள் முக்கியமாக மூட்டு வீக்கத்தைக் குறைக்கவும், வலியைக் கட்டுப்படுத்தவும், மூட்டின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன. அறுவை சிகிச்சை இல்லாத இந்தப் பராமரிப்பு முறையில், பாதிப்பு மேலும் தீவிரமடைவதைத் தடுத்து, நடமாட்டத்தை மீட்டெடுப்பதே முக்கிய நோக்கமாகும். பிசியோதெரபி (Physiotherapy) எனப்படும் இயன்முறை மருத்துவம்தான், இந்தச் சிகிச்சையின் அடித்தளமாகும். முழங்காலைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் மூட்டின் மீதான அழுத்தத்தைக் குறைக்க முடியும். குறிப்பாக, குவாட்ரிசெப்ஸ் (quadriceps) மற்றும் ஹாம்ஸ்ட்ரிங்ஸ் (hamstrings) தசைகளுக்கான உடற்பயிற்சிகள் உடலின் எடையைச் சமமாகப் பகிர்ந்தளித்து மூட்டு வலியைக் குறைக்கும். பிசியோதெரபி (Physiotherapy) எனப்படும் இயன்முறை மருத்துவம்தான், இந்தச் சிகிச்சையின் அடித்தளமாகும். Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா? குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகள் (Low-impact activities) மூலமும் இதை ஓரளவு சமாளிக்கலாம். அதாவது முழங்கால் மூட்டுகளின் அசைவுத்திறனைப் பராமரிக்க நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யலாம். உடல் எடையில் சில கிலோவைக் குறைப்பது கூட முழங்கால் மூட்டுகளின் மீதான அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கும். முழங்காலில் ஏற்படும் தொடர்ச்சியான வீக்கத்தைக் கட்டுப்படுத்த பிஆர்பி (PRP) போன்ற ஆர்த்தோபயாலஜிக்ஸ் சிகிச்சைகள் குறித்து உங்கள் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரிடம் ஆலோசிக்கலாம். இவற்றுடன் தகுந்த வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் முழங்கால் பட்டைகளைப் (bracing) பயன்படுத்துவதன் மூலம் அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போட்டு, தினசரி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/health/knee-pain-joint-wear-and-tear-osteoarthritis-can-it-be-cured-without-surgery




