மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் நேற்று(செப்.11) காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பாரதி பாஸ்கர், " அவர் எங்கள் எல்லோருக்கும் ஒன்றை தான் சொல்லிக்கொடுத்தார். சாலமன் பாப்பையா நமது பேச்சு, செயல், சிந்தனை எல்லாம் எளியவர்கள், வறியவர்கள், குரலற்றவர்கள் அவர்களுக்காக இருக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய உச்சாணிக் கொம்பில் இருந்தாலும் அவரை விட எளிமையான மனிதரை இந்த உலகத்தில் பார்க்க முடியாது. அவருடைய 85 வயதுக்கு பிறகும் கூட அவருடன் புகைப்படம் எடுக்க யாராவது வந்தால் எழுந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டு தான் புகைப்படம் எடுத்துக்கொள்வார். உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தமிழ் மக்களையும் அவர் அவ்வளவு நேசித்தார். தமிழ் இலக்கியத்திற்காகவும், திருக்குறளுக்காகவும் அவர் செய்தவை பல காலங்களுக்கு இருக்கும். அவரது மறைவினால் நாங்கள் கலங்கி நிற்கிறோம். நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. பாரதி பாஸ்கர் அனாதை பிள்ளைகளாக நாங்கள் இப்போது நிற்கிறோம். இத்தனை நாள் எங்களுக்கு வழிகாட்டினார். அவருடைய புகழ் எல்லாவற்றையும் எங்களுடையதாக மாற்றினார். அவருடைய பிள்ளைகளாகிய நாங்கள் திசை தெரியாமல் நிற்கிறோம்" என்று அழுதபடி மனமுடைந்து பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/literature/bharathi-baskar-about-soloman-pappaiah




