நியூயார்க், எல் நினோ மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களில் ஒரே நேரத்தில் 5 புயல்கள் உருவாகி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளன. வானிலை ஆராய்ச்சியாளர்கள் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட பன்மடங்கு அதிகரித்துள்ளதால், ஒரே நேரத்தில் பல தீவிர புயல்கள் உருவாகும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருந்த நிலையில், தற்போது அது உண்மையாகியுள்ளது. ஒரே நேரத்தில் 5 புயல்கள் உலகையே அச்சுறுத்தும் வகையில் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களில் போலோ, சரிகே, நோலோ, ஓடாலிஸ் மற்றும் ரேச்சல் ஆகிய 5 புயல்கள் ஒரே நேரத்தில் சுழன்றடித்து வருகின்றன. போலோ, சரிகே மற்றும் நோலோ ஆகிய 3 புயல்களும் அசுர வேகம் எடுத்து 'அதிதீவிர புயல்களாக' மாறியுள்ளன. மற்ற இரு புயல்களான ஓடாலிஸ் மற்றும் ரேச்சல் ஆகியவை நடுத்தர புயல்களாக வலுப்பெற்றுள்ளன. இதுபோதாதென்று, கடலில் மேலும் 3 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும் உருவாகி வருகின்றன. நாடுகளை நோக்கி நகரும் அசுர புயல்கள் போலோ புயல் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் மெக்சிகோ கடற்கரையை ஒட்டி உருவான இந்த புயல், கண்ணிமைக்கும் நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி கரையை நோக்கி சீறிப் பாய்ந்து வருகிறது. நோலோ புயல் பசிபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டு, மணிக்கு பல கிலோமீட்டர் வேகத்தில் ஹவாய் தீவுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சரிகே புயல் மேற்கு பசிபிக் பகுதியில் உருவெடுத்து, தைவானை நோக்கி நகர்ந்து கொண்டே அசுர பலம் பெற்று அதிதீவிர புயலாக மாறி வருகிறது. பயங்கர ஆபத்து தீவிர கண்காணிப்புஇந்த அதிதீவிர புயல்களின் கோரத் தாண்டவத்தால் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் ஜப்பானின் ஓகினாவா ஆகிய நாடுகள் மற்றும் தீவுப் பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புயல்கள் அனைத்தும் கடலோர மற்றும் தீவு நாடுகளை நோக்கி வெறியுடன் நகர்வதால், அந்தந்த நாட்டு வானிலை மையங்கள் தங்களது செயற்கைக்கோள்கள் மூலம் புயல்களின் நகர்வுகளை 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டு உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பல புயல்கள் உருவாவது இயல்பு என்றாலும், ஒரே நேரத்தில் 3 புயல்கள் தீவிர நிலையை எட்டுவது அரிதான நிகழ்வாகும். இதற்கு முன்னர் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஒரே நேரத்தில் 3 அதிதீவிர புயல்கள் உருவானது. ஆய்வாளர்கள் சமீபத்திய ஆண்டுகளில் கடல் நீர் அதிகளவில் வெப்பமடைந்து வருவதால், சாதாரண காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள்கூட குறுகிய காலத்தில் வேகமாக வலுப்பெற்று தீவிர புயல்களாக மாறும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரே நேரத்தில் பல புயல்கள் உருவாகியுள்ள நிலையில், அவற்றின் நகர்வு. தீவிரம் மற்றும் கரையைக் கடக்கும் சாத்தியம் ஆகியவற்றை வானிலை ஆய்வு மையங்கள் தொடர்ந்து, கண்காணித்து வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/five-storms-form-simultaneously-in-pacific-and-atlantic-three-countries-at-risk




