“இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது” என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருப்பது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முக்கிய சிறப்பு. சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் சாகாவரம் பெற்ற மனிதராக வரும் நிவின் பாலிக்கு, தனது வாழ்க்கையில் அஞ்சலியின் மீதான காதல் மட்டும் மாறாமல் இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அஞ்சலியை தேடிக்கொண்டே இருக்கிறார். தீபாவளி இரவில் ஒரு ரெயிலின் முன்பதிவு இல்லாத கடைசி பெட்டியில் அவர் தூங்கி கொண்டிருக்கும் நிவின் பாலிக்கு ஒரு கனவு வருகிறது. அந்த கனவில் அஞ்சலி தோன்ற, அவரை தேட தொடங்குகிறார். இன்னொரு புறம் பல ஆண்டுகளாக துபாயில் வேலை செய்துவிட்டு, சம்பாதித்த பணம் மற்றும் குடும்பத்திற்கான பொருட்களுடன் சொந்த ஊருக்கு நிவின் பாலி செல்லும் அதே ரெயிலில் பயணிக்கிறார் சூரி. சூரி ரெயிலில் ஏறியதும், அங்கு தூங்கி கொண்டே தனது காதலியை கனவில் பார்த்துக் கொண்டிருக்கும் நிவின் பாலியை எழுப்புகிறார். இதன்பின் நிவின் பாலியால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் சூரி. இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே நடக்கும் மோதல்கள் நடக்கிறது. காதலியை தேடி கொண்டிருக்கும் நிவின் பாலி அவளை கண்டு பிடித்தாரா இல்லையா? சூரி தனது சொந்த ஊருக்கு சென்றாரா இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. நிவின் பாலி வித்தியாசமான தோற்றத்திலும், உடல் மொழியிலும் கவனம் ஈர்க்கிறார். அவரது அழுத்தமான நடிப்பு யோசிக்க வைக்கிறது. சூரியும் வித்தியாசமான பரிமாணத்தில் கவருகிறார். இருவரிடையே நடக்கும் உரையாடல்கள் ரசிக்க வைக்கிறது. காதலியாக வரும் அஞ்சலியும் தனக்கேரிய தனித்துவ நடிப்பை கொடுத்து அசத்துகிறார். இவர்களுடன் ஒரு எலியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. ஆச்சரியம் தருகிறது. ஏகாம்பரம் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்துடன் நம்மை பயணிக்க வைக்கிறது. அழுத்தமான கதைக்களம் படத்தின் பலம். காட்சிகளில் இன்னும் சுவாரசியம் இருந்திருக்கலாம். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, ஒவ்வொரு உயிரினத்திற்கும் சொந்தமானது என்பதை அழகாக கூறி, மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான படத்தை எடுத்து கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் ராம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/movie-review/yezhu-kadal-yezhu-malai-cinema-review



