தெஹ்ரான் நாங்கள் எரிபொருள் விற்க முடியவில்லை என்றால். அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள், கடந்த பிப்ரவரி இறுதியில் நடத்திய தாக்குதலால் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. உலக நாடுகளுக்கு 5-ல் ஒரு பங்கு சரக்குகளை கொண்டு செல்ல கூடிய முக்கிய பகுதியை ஈரான் கைப்பற்றியது. இதனால், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டதுடன், பல பகுதிகளில் பற்றாக்குறையும் காணப்படுகிறது. இந்த சூழலில், ஈரானுடன் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது. ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்வதற்கான அந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத சூழலே தொடர்கிறது. ஈரான் சபாநாயகர் சமீபத்தில், வளைகுடா பகுதியையொட்டி அமைந்த ஹார்மூஸ் ஜலசந்தியை டிரம்ப் ஜலசந்தி என பெயர் மாற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் இன்று கூறும்போது, அமெரிக்கா எப்படி செயல்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஹார்மூஸ் ஜலசந்தி மற்றும் கப்பல் போக்குரத்து உள்ளிட்டவை பற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் மாயையான விசயங்களை பேசினார். அமெரிக்கர்களும் மற்றும் பிற நாடுகளும் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எரிபொருள் விற்க முடியாத ஒரு பகுதியில், வேறு ஒருவரும் எரிபொருளை விற்க முடியாது. எங்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்றால், பின்னர் எந்தவொரு கட்டமைப்புக்கும் பாதுகாப்பு இருக்காது. இதனை நாங்கள் முன்பே கூறியிருக்கிறோம் என எச்சரிக்கும் வகையில் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/if-we-cannot-sell-fuel-iran-warns-us




