தேவையான பொருட்கள்: - கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - ½ டீஸ்பூன் அரிசி - ½ டீஸ்பூன் சீரகம் - ½ டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கடுகு - சிறிதளவு உளுந்தம் பருப்பு - சிறிதளவு கறிவேப்பிலை - 1 கொத்து பூண்டு - 10 பல் (உறித்தது) சின்ன வெங்காயம் - 1 கப் (தோல் நீக்கி வெட்டி வைத்தது) தக்காளி - 1 (சிறிய துண்டுகளாக வெட்டியது) மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன் பெருங்காயப் பொடி - சிறிதளவு புளி - எலுமிச்சை அளவு தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை முதலில் கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைக்கவும். பாத்திரம் சூடாகியதும், கொத்தமல்லி, மிளகு, அரிசி, சீரகம், ½ டீஸ்பூன் வெந்தயம், 3 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு மிதமான சூட்டில் லேசாக வறுக்கவும். சற்று ஆறிய உடன் அதை மிக்சி ஜாரில் எடுத்து பவுடராக திரித்துக்கொள்ளவும். அடுத்து, வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். அதில், நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெய் சூடாகியதும், கடுகு, உளுந்தம் பருப்பு, ½ டீஸ்பூன் வெந்தயம், 1 காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்கவும். அடுத்து வெட்டிவைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும், வெட்டிவைத்த தக்காளியை சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கும்வரை வதக்கவும். தக்காளி நன்கு வெந்தவுடன் மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறிவிடவும். தொடர்ந்து, தண்ணீரில் ஊறவைத்த புளியை கரைத்து, புளி கரைசலை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, போதுமான அளவு உப்பு சேர்த்து, நன்கு கலந்துவிடவும். நன்கு கொதிக்கத் தொடங்கியவுடன் கெட்டியாக தொடங்கும். எண்ணெய்யும் பிரிந்து வரும். அவ்வாறு வந்தால், வெந்தய குழம்பு தயாராகிவிட்டது என்று அர்த்தம். சிலருக்கு குழம்பு தண்ணீராக இருந்தால் பிடிக்கும். அப்படி என்றால், உடனே அடுப்பை 'ஆப்' செய்துவிடவும். ஆனால், சிலருக்கு குழம்பு கெட்டியாக இருந்தால்தான் பிடிக்கும். அதுபோன்று விரும்பினால், மேலும் சற்று நேரம் குழம்பை அடுப்பில் வைத்து கிளறிவிடவும். குழம்பில் உள்ள தண்ணீர் வற்றி, தொக்கு பதத்திற்கு வரும். அந்த நேரத்தில் அடுப்பை 'ஆப்' செய்துவிடவும். சுவையான, மணமான வெந்தய குழம்பு ரெடி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/sunday-special-how-to-make-delicious-aromatic-vendhaya-kuzhambu-fenugreek-curry



