சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். 'விஸ்வநாத் & சன்ஸ்' அந்தவகையில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், " கேரளா எப்போதும் கடவுளின் தேசம் என்று சொல்வார்கள். நான் அன்பின் தேசம் என்று தான் சொல்லுவேன். 20 வருடங்களுக்கு முன்பு இந்த அன்பு இங்கு ரெஜிஸ்டர் ஆனது. உங்கள் அன்பைத் தொடர்ந்துக் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். இந்த அன்பு என்னைப் பொறுத்தவரைக்கும் லைஃப் டைம் செட்டில்மென்ட். இதற்கு நான் எவ்வளவு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. "அன்னைக்கு அழுதுட்டு இருந்தேன்; இன்னைக்கு சூர்யா சாரோட." - நினைவுகளைப் பகிர்ந்த மமிதா பைஜூ மழையால் இங்கு நிறைய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் வேண்டிக்கொள்வோம். அவர்கள் விரைவில் அதில் இருந்து மீண்டு வர வேண்டும். என்னுடைய பிறந்தநாளுக்காக நிறைய பேருக்கு நீங்கள் உதவி செய்திருக்கிறீர்கள். என்னை மட்டும் சந்தோஷப்படுத்தாமல் என் பெயரில் மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துகிறீர்கள்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். சூர்யா தொடர்ந்து படம் குறித்து பேசிய சூர்யா, " 'விஸ்வநாத் & சன்ஸ்' எனக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்த வெங்கி அத்லூரிக்கு நன்றி. இந்தப் படத்தில் அவருடைய எழுத்து உங்களுக்கு பிடிக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு டயலாக்கும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அழகானப் பெண்கள் கதாப்பாத்திரம் இந்தப் படத்தில் இருக்கிறது. மமிதா பைஜூ அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு தகுதியானவர் தான். இந்தப் படத்தில் அவருடைய எனர்ஜி அழகாக இருக்கும். மமிதா தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் சினிமாவிற்கு வர நினைக்கும் இளம் பெண்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/surya-about-mamita-baiju-in-kerala-event




