மயிலாடுதுறை, அரசு பேருந்து நடத்துனரை வெட்டிக்கொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வெட்டிக்கொலை மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு மாலதி என்ற மனைவியும் மற்றும் ஒரு மகனும் உள்ளார். தமிழ்ச்செல்வன் அரசு பேருந்து நடத்துனராக பணிப்புரிந்து வருகிறார். அதிகாலை 4.30 மணிக்கு பணிக்குச் சென்று இரவு 10 மணிக்கு வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்ற தமிழ்ச்செல்வன் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் ஆற்காடு ரெயில்வே கேட் பகுதி சாலையோரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த பொதுமக்கள், இது குறித்து மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணை பொதுமக்கள் அளித்த தகவலின் மூலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், அங்கு கொலை செய்யப்பட்டிருப்பது யார் என விசாரணை செய்ததில் அவர் அணிந்திருந்த சீருடை மற்றும் அடையாள அட்டை மூலமாக அரசு பேருந்து நடத்துனர் தமிழ்ச்செல்வன் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்ச்செல்வனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்பகை காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. சினேக பிரியா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-conductor-hacked-to-death-police-launch-net-to-nab-mysterious-persons




