கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு முன்னதாக கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெற்ற போது, முதலமைச்சர் விஜய் புகைப்படம் மட்டுமின்றி முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் வைக்க வேண்டும் என தி.மு.க-வினரும், காமராஜர் புகைப்படமும் வைக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படம் இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. பின்னர் அரசு அலுவலகங்களில் முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படம் வைக்க அரசு ஆணை இருப்பதாகக் கூறி, ஆணையர் இருக்கை அருகே ஸ்டாலின் புகைப்படம் மட்டும் வைக்கப்பட்டது. கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் வைக்க வேண்டும் என அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதேபோல பல்வேறு பகுதிகளிலும் அரசு அலுவலகங்களில் முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படங்கள் வைப்பது தொடர்பாகப் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன. முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படம் இந்த நிலையில் இன்று நடந்த மாமன்றக் கூட்டத்தின்போது முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படப் பிரச்னைகளைத் தவிர்க்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர்கள் பலரின் புகைப்படங்களும் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டு இருந்தன. முதலமைச்சர் விஜய் புகைப்படத்தின் அருகே முன்னாள் முதலமைச்சர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி புகைப்படமும், வலப்புற சுவரில் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களும், இடப்புற சுவரில் ஓமந்தூர் ராமசாமி, காமராஜர், பக்தவச்சலம், ராஜாஜி மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதேசமயம் முன்னாள் முதலமைச்சர்கள் ஜானகியம்மாள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் படங்கள் இடம்பெறவில்லை. முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படம் வைக்கும் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது. `5 பஃப்ஸ் ₹20; ஒரு நாளைக்கு ₹600 சம்பாத்தியம். எனக்கு இது போதும்!'- கோவை பஃப்ஸ் காமராஜின் மனஉறுதி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/coimbatore-corporation-finds-solution-to-issue-regarding-chief-ministers-photos




