அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த வீட்டை திறந்து சோதனை செய்தபோது, உள்ளே அந்த வீட்டில் வசித்து வந்த ரியா என்ற பெண் கழுத்தை அறுத்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அவர் உடலில் தலை இல்லை. உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து வீடு முழுக்க சோதனை செய்து பார்த்தபோது, அங்கிருந்த குளிர்சாதனப்பெட்டியில் ரியாவின் தலை இருந்தது. வீட்டில் ரியாவின் கணவர் ராமானுஜ் இல்லை. இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து இருந்தது. கொலை குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ராமானுஜ்ஜை தேடி வந்தனர். இந்நிலையில் ராமானுஜ் போலீஸில் சரணடைந்தார். அவரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கோர்ட்டிற்கு வெளியில் ராமானுஜ் அளித்த பேட்டியில், ''நான் என் மனைவியைக் கொலை செய்து விட்டேன். எனது சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த பிறகு சுகர் டேடியையும் கொலை செய்வேன்'' என்று தெரிவித்தார். உடனே பத்திரிகையாளர்கள் சுகர் டேடி யார் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அதனை தெரிவிக்க மறுத்த ராமானுஜ், பத்திரிகையாளர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். கொலைக்கான நோக்கம் குறித்தும், சுகர் டேடி யார் என்பது குறித்தும் போலீஸார் ராமானுஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/no-regrets-would-kill-sugar-daddy-guwahati-mans-chilling-confession-after-beheading-wife




