தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள லாடஜ், ஸ்பா உள்ளிட்ட இடங்களில், அதிகப்படியாக பாலியல் தொழில் நடப்பதாக, எஸ்.பி சுந்தரவதனத்திற்குப் புகார்கள் சென்றுள்ளன. இது தொடர்பாக, கும்பகோணம் மேற்கு மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக-வில் பொறியாளர் அணி அமைப்பாளராக உள்ளவர் ராஜாரகுபதி. நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில், இவருக்குச் சொந்தமான, பைவ் ஸ்டார் லாட்ஜில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் அங்கு பாலியல் நடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாலியல் சோதனை அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஆறு பெண்களை போலீஸார் மீட்டனர். இதே போல், சாரங்கபாணி தெற்கு வீதியில் உள்ள கலர்ஸ் என்ற அழகு நிலையத்தில் நடத்திய சோதனையில் பாலியல் தொழில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வடமாநிலப் பெண்கள் உள்ளிட்ட நான்கு பெண்களை போலீஸார் மீட்டனர். இதுகுறித்து, மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மீட்கப்பட்ட பெண்களை திருச்சியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், லாட்ஜ் பணியாளர்களான அணைக்கரை பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (34), கும்பகோணத்தைச் சோ்ந்த மகேஷ்(50) மற்றும் கலர்ஸ் அழகு நிலைய மேனேஜரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சோட்டால் தாக்கூர் (36) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அத்துடன் தலைமறைவாக உள்ள மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸார் சோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வீரமணி பாலியல் வழக்கு: ``கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு என்ன?" - அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/kumbakonam-sex-trade-in-lodge-owned-by-dmk-functionary-10-women-rescued




