ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதி இருவரும் இசையமைத்திருக்கிறார்கள். அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.23) நடைபெற்றது. ஏழு கடல் ஏழு மலை படத்தில். இதில் கலந்துகொண்டு பேசிய அஞ்சலி, " இந்தப் படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சூரி எனக்கு ஒரு நல்ல நண்பர். அவருடைய நல்ல மனதிற்கு இப்போது நிறைய சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார். சூரியின் வெற்றியை என்னுடைய வெற்றிபோல் உணர்கிறேன். இன்னும் நிறைய வெற்றிகளை அவர் அடைய வேண்டும். ஏழு கடல் ஏழு மலை: "ராம் சார் படத்தில நடிக்க கொஞ்சம் பயமாக இருந்துச்சு, ஆனா."- நடிகர் சூரி என்னுடைய முதல் படத்தில் இருந்து 20 வருடங்களாக நானும், ராம் சாரும் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். எனக்கு ஒரு அப்பா, வழிகாட்டி என நிறைய கோணத்தில் ராம் சாரை நான் பார்த்திருக்கிறேன். 'ஏழு கடல் ஏழு மலை' படம் ராம் சாருக்கு எவ்வளவு ஒரு நெருக்கமான ஒரு படம் என்று தெரியும். அதில் என்னுடைய கதாபாத்திரத்தை அழகாக எழுதியதற்கு நன்றி சார். நடிகை அஞ்சலி சினிமாவில் நான் 20 வருடங்களை எட்டியதற்கு நிறைய பேர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். என்னுடைய இந்த வெற்றிக்கும், பயணத்திற்குள்ளும் ராம் சார், வசந்த பாலன் சார், கார்த்திக் சுப்புராஜ், சுந்தர் சார் போன்ற நிறைய இயக்குநர்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 55 படங்களில் நடித்துவிட்டேன். எல்லா இயக்குநர்களும் எனக்கு அழகானக் கதாபாத்திரங்களைத் தான் எழுதியிருக்கிறார்கள். அதற்காக இந்தத் தருணத்தில் நான் எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/actress-anjali-speech-in-yezhu-kadal-yezhu-malai



