சென்னை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- தி.மு.கழகம் ஜமீன்களிலும் - பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த நம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் இன்று. நாற்பதுகளில் இருந்த பேறிஞர் அண்ணா, இருபதுகளில் இருந்த கலைஞர் உள்ளிட்ட தன் தம்பிமார்களுடன் கொட்டும் மழையில் தொடங்கிய தி.மு.கழகம் இன்று 78-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த 78 ஆண்டுகளில் பல எட்டாத உயரங்களுக்குத் தமிழ்ச்சமுதாயத்தை ஏற்றிவிட்ட பெருமை கழகத்துக்கு உண்டு. சமூக நீதி - மாநில உரிமை - பெண் விடுதலை - தொழில் வளர்ச்சி என கொள்கை அடித்தளத்தில், தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது முதல், தன்னிகரற்ற மாநிலமாக்கியது வரை கழகம் ஆற்றிய பணிகள் ஏராளம். எத்தனையோ அடக்குமுறைகள் - ஏவப்பட்ட நெருக்கடிகள் - புதிய புதிய எதிரிகள், இத்தனைக்குப் பிறகும் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் துடிப்போடு நடைபோடுகிறது தி.மு.கழகம். கருப்பு - சிவப்பு வெறும் நிறமல்ல நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நம் கழகத்தின் மேன்மைக்கு அயராது உழைப்போம். கருப்பு - சிவப்பு வெறும் நிறமல்ல - நம் உயிர் என்று முழங்குவோம்! வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-brought-politics-that-was-on-the-lands-and-farms-to-the-common-people-udhayanidhi




