லாகூர், பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு இதனிடையே, அமெரிக்கா - ஈரான் போரால் உலகின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த போரின் தாக்கம் பாகிஸ்தானிலும் எதிரொலித்து வருகிறது. அதன்படி, அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 328 ரூபாய்க்கும் (இந்திய மதிப்பில் ரூ. 113), டீசல் 380 ரூபாய்க்கும் (இந்திய மதிப்பில் ரூ. 130) விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, பெட்ரோல், டீசலுக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போராட்டம் இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தானில் இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜமாத் இ இஸ்லாமி கட்சி சார்பில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தால் பாகிஸ்தானில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/petrol-diesel-price-hike-protests-in-pakistan




