புதுடெல்லி பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. பிரதமர் மோடிக்கு, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இந்தியாவின் சிற்பி இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், உலகின் மிக பிரபலம் வாய்ந்த தலைவருக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரே இந்தியா - மிகச்சிறந்த இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வையை கொண்டவர். புதிய இந்தியாவின் சிற்பி மற்றும் நம்முடைய வழிகாட்டி. 145 கோடி இந்தியர்களின் வாழ்வில் மகிழ்ச்சி, வளம், பாதுகாப்பு மற்றும் பெருமைக்கான புதிய விடியலை உருவாக்குவதற்கான தேசிய அளவிலான இடைவிடாத வேள்விக்காக தன்னையே அர்ப்பணித்து கொண்டவர் என பதிவிட்டு உள்ளார். பொதுமக்களின் நலன் தேசம் முதலில் மற்றும் பொதுமக்களின் நலன் என்ற வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்கை அடையும் நோக்கில் செயல்படும் பிரதமர் மோடியின் உள்ளார்ந்த ஈடுபாடு ஓர் உந்துதலை ஏற்படுத்துகிறது என்றும் பதிவிட்டு உள்ளார். இதேபோன்று பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகளும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/prime-minister-modi-76th-birthday-up-chief-minister-bjp-leaders-greetings



