திருவனந்தபுரம், சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு எனவே தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் அடிப்படை வசதிகளை திறம்பட செயல்படுத்த அந்தந்தத் துறை அதிகாரிகளுக்கு இப்போதே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சபரிமலையில் விடுதி அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் அறைகள் இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலையில் அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும். சபரிமலையில் விடுதி அறைகள் அனைத்தும் ஆன்லைன் முறைப்படி பக்தர்கள் முன்பதிவு செய்ய வசதி செய்யப்படும். தற்போது வரை 190 அறைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. மேலும் கூடுதல் அறைகள் தயார் படுத்தப்படும். இனிமேல் அய்யப்ப சங்கமம் நடத்தப்படாது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/accommodation-rooms-at-sabarimala-can-be-booked-online-devaswom-board-president




