Fuld artikel
ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கைகளைக் கட்டிப்போட்டுள்ளது அமெரிக்க நாடாளுமன்றம். நிறைவேற்றம் ஆம்... நேற்று ஈரான் போரை நிறுத்துமாறு ட்ரம்பிற்கு வலியுறுத்தும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானம் 50-48 என்கிற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையின் இந்தத் தீர்மானம் 215-208 வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றம்Share Market: உங்க Portfolio-ல் எத்தனை பங்குகள் இருக்கலாம்? 50 பங்குகளே அதிகமா? ட்ரம்பிற்கு பின்னடைவு ஈரான் போர் தொடங்கியதில் இருந்து நான்கு முறை கீழவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதற்கு மேலவையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆனால், இந்த முறை மேலவையிலும் ஈரான் போருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது. இது ஈரான் போரில் அமெரிக்காவிற்கு எந்த அளவிற்கு அதிருப்தி என்பதைக் காட்டுகிறது. மேலும், இது ட்ரம்பிற்கு மிகப்பெரிய பின்னடைவாகும். எந்தச் சட்டத்தின் கீழ்? இந்தத் தீர்மானத்தின் இன்னொரு ஹைலைட், இது போர் சட்டம், 1973-ன் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படியென்றால், இந்தத் தீர்மானத்தின் படி, எதிரி நாட்டில் இருந்து அமெரிக்க ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று பொருள். முக்கியமாக, இந்தச் சட்டத்தின் படி நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு அமெரிக்க அதிபரின் கையெழுத்து தேவையில்லை. இதனால், இது ட்ரம்பிற்கு மிகப்பெரிய நெருக்கடி... பின்னடைவு. சொந்தக் கட்சியிலேயே... கீழவை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ட்ரம்பின் சொந்த கட்சியான குடியரசு கட்சியினரின் நான்கு பேர் ஆதரவு இருந்தது. நேற்று மேலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 4 குடியரசுக் கட்சியினர் சாதகமாக வாக்களித்துள்ளனர். இருவர் வாக்களிக்கவே இல்லை. வெள்ளை மாளிகை'ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியில் 'இத்தனை' பேரல் எண்ணெய்!' - ட்ரம்ப் உற்சாகம் வெள்ளை மாளிகை எதிர்ப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இந்தத் தீர்மானத்திற்கு வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வந்துள்ளது. இந்தத் தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது... இது சட்டத்திற்குப் புறம்பானது என்று வாதாடுகிறார்கள். இதனால், வெள்ளை மாளிகை இந்தத் தீர்மானத்தை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது. ஈரான், அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், இதன் திசையை தீர்மானம் எப்படி மாற்றியமைக்கும் என்கிற கேள்வியும் எழுகிறது. எது எப்படியோ, ட்ரம்பின் அதிரடியான ஈரான் போருக்கு எதிரான அமெரிக்காவின் குரலின் சத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Single Parent: Retirment பிளானிற்கு எதில் முதலீடு செய்யலாம்?| பணம் வளர்ப்போம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor



