நகோயா, ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. பெண்கள் ஸ்கீட் அணி வெண்கலம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 331 புள்ளிகளுடன் வெண்கலம் மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியின் ‘ஸ்கீட்’ அணிப் பிரிவில் இந்தியாவில் ரைசா தில்லான், பரீனாஸ் தாலிவால் மற்றும் மகேஸ்வரி சவுகான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 331 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இதில் ரைசா தில்லான் மற்றும் பரீனாஸ் தாலிவால் ஆகியோர் தலா 125-க்கு 111 புள்ளிகளையும், மகேஸ்வரி சவுகான் 109 புள்ளிகளையும் பெற்றனர். இப்பிரிவில் சீனா 346 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், கஜகஸ்தான் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றின. துப்பாக்கி சுடுதலில் 6-வது பதக்கம் இந்த வெண்கலப் பதக்கத்தின் மூலம், 2026 ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-2026-indian-womens-skeet-team-secures-bronze-medal




