டிசம்பர் 2021-ல், 3 நிமிட ஜூம் (Zoom) மீட்டீங்கில் 900 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்து உலகளவில் பெரும் சர்ச்சைக்கு ஆளான இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விஷால் கார்க், தற்போது Better Home & Finance நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த விஷால் கார்க், ஸ்டெர்ன் பிசினஸ் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு 'மைரிச்அங்கிள்' நிறுவனத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, 2014-ல் 'பெட்டர்' நிறுவனத்தைத் தொடங்கினார். விஷால் கார்க் பாரம்பரிய அடமானக் கடன் முறைக்கு மாற்றாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தொற்றுநோய்க் காலத்தில் ரீஃபைனான்சிங் ஏற்றத்தின் போது 8 பில்லியன் டாலர் மதிப்பைப் பெற்றிருந்தது. ஆனால், 2021-ல் 900 ஊழியர்களை இரக்கமின்றி நீக்கிய சம்பவமும், அதைத் தொடர்ந்து எழுந்த கொந்தளிப்பும் நிறுவனத்தின் நற்பெயரைக் கடுமையாகப் பாதித்தன. 2022-க்குப் பிறகு நிறுவனம் 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்திருக்கிறது. விஷால் கார்க் தலைமையின் கீழ் நிறுவனத்தின் பங்குகள் 90%-க்கும் மேல் சரிந்திருக்கிறது. மேலும், விஷால் கார்க்கின் முடிவெடுக்கும் திறன், குணம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் ஏற்பட்ட கவலைகள் காரணமாக மற்ற இயக்குநர்கள் அனைவரும் அவரை நீக்க ஒருமனதாக வாக்களித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய விஷால் கார்க், ``2021-ல் 1.5 பில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை 2023-ல் 70 மில்லியன் டாலராக சரிந்து, தற்போதைய சந்தை மதிப்பு தோராயமாக 300 மில்லியன் டாலராக உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் ஹோம்-ஈக்விட்டி கடன்கள் மூலம் 2026-ல் வருவாய் 200 மில்லியனை எட்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. விஷால் கார்க் லாபத்தை நெருங்கும் "5-யார்டு கோட்டில்" நிறுவனம் இருக்கும் தருணத்தில் நான் நீக்கப்பட்டுள்ளேன். எனது பதவியை மீண்டும் பெற வழக்கறிஞர்களை அமர்த்தியிருக்கிறேன். நிறுவனம் மீண்டும் லாபப் பாதைக்கு வரும் வரை ஆண்டுக்கு 1 டாலர் சம்பளத்தில் பணியாற்றத் தயார். சிறப்பு வாக்குரிமை கொண்ட பங்குதாரர்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. நிறுவனத்தின் எதிர்காலம் இன்னமும் பிரகாசமாகவே உள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார். `கையில் ரூ.1.87 லட்சம்; 6 நண்பர்கள்; ஒரு மாடி அறை'- HCL நிறுவனம் உருவான கதையை பகிர்ந்த அஜய் சௌத்ரி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/trending/viral/vishal-garg-who-laid-off-900-employees-via-a-zoom-call-has-been-removed-as-ceo-of-bettercom




