தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர், கோடுகிழி பகுதியில் விதியை மீறி இரவு நேரத்தில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மெலட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் முத்துவேல், தலைமைக் காவலர் ராமன். இவர்கள் இருவரும் டூவீலரில் கோடுகிழி பகுதியில் மணல் கடத்தல் நடக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து தடுப்பதற்காக நேற்று இரவு சென்றுள்ளனர். டிராக்டர் மோதியதில் காயம்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துவேல் அப்போது, கோடுகிழி பாலம் அருகே டிராக்டர் ஒன்று வர எஸ்.எஸ்.ஐ முத்துவேல் டார்ச்லைட் அடித்து டிராக்டரை நிறுத்தச் சொல்லியுள்ளார். ஆனால் டிராக்டர் நிற்காமல் மோதுவதுபோல் வந்துள்ளது. பின்னர் நகர்ந்து செல்லும்போது விழுந்ததில் டிராக்டர் மோதி முத்துவேலின் கால, முகத்தில் காயம் ஏற்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த தலைமைக் காவலர் ராமன், மெலட்டூர் காவல் நிலையத்தில் இருந்த போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக ஸ்டேஷனில் இருந்து உதவி ஆய்வாளர் போதிமணி, காவலர்கள் வந்ததுடன் காயம் அடைந்த முத்துவேலை மீட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம், தஞ்சாவூர் போலீஸ் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவரம் அறிந்த தரப்பில் பேசினோம். ``டிராக்டரில் மணலை எடுத்துச் சென்று இறக்கிவிட்டு டிராக்டரை காலியாக ஓட்டி வந்துள்ளார் டிரைவர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் டிராக்டர் வருவதைப் பார்த்த முத்துவேல் டார்ச் அடித்து டிராக்டரை நிறுத்த முயன்றுள்ளார். போலீஸார் நிற்பதைப் பார்த்த டிராக்டர் டிரைவர், டிராக்டர் சென்று கொண்டிருந்தபோதே குதித்து ஓடி விட்டார். இரவு நேரம் என்பதால் டிரைவர் குதித்தது தெரியவில்லை. டிராக்டர் நிற்காமல் வந்து கொண்டே இருக்க டிரைவர்தான் மோதுவதுபோல் வருகிறார் என முத்துவேல் நினைத்து விட்டார். சுதாரித்து நகர்வதற்குள் டிராக்டர் மோதியதில் கால், முகத்தில் காயம் ஏற்பட்டது. டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் யார் என்பது தெரியாததால் தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/police-ssi-injured-after-hit-by-sand-theft-tractor-in-tanjore




