சென்னை, நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஜீப் சவாரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வனவிலங்குகளுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நள்ளிரவில் விலங்குகளை தாக்குவது போல ஜீப் ஓட்டுனர்கள் அத்துமிறலில் ஈடுபடுகிறார்கள் என்றும் வேதனை தெரிவித்தனர். முதுமலையில் பதிவு செய்யப்பட்ட ஜீப்களில் மட்டுமே சுற்றலா பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், அதிகாலை 6 மணிக்கு முன்பு ஜீப் சவாரியை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், மாலை 5:30 மணிக்கு பின்பு ஜீப் சவாரியை அனுமதிக்க கூடாது என்றும் வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/mudumalai-jeep-safari-high-court-orders-forest-department-not-to-allow-rides-after-530-pm




