சென்னை, தமிழகத்தில் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. திருநங்கையரும் (Transgender) கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம் என முதல்-அமைச்சர் விஜய் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கத்திற்கு பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;- “ஏராளமான பெண்களுக்கு இன்றுவரை பொருளாதார சுதந்திரம் இல்லாத நிலைதான் உள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தை நம்பி பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பது மிகவும் பயனுள்ள, நல்ல விஷயமாக இருக்கும். இது ஏற்கனவே இருக்கின்ற திட்டம்தான் என்றாலும், அந்த திட்டத்தை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்தியிருக்கிறார்கள். இந்த திட்டம் மிகவும் வரவேற்கக் கூடிய திட்டம். 10 ரூபாய் மிச்சமானாலும் பெண்களுக்கு அது மிகவும் உபயோகமாக இருக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-free-travel-scheme-for-women-pmk-mla-sowmya-anbumani-welcomes-the-move



