திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன்,14 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 22 பேர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலை முன்னிட்டு தாராபுரம் தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பணம், பரிசு பொருட்கள் பட்டுவாடா, தேர்தல் விதிமீறல்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மூலனுாரில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, நிலை கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு விரைந்த பறக்கும் படையினர், மூலனுார், தாளக்கரை பிரிவில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் வீட்டில் சோதனையிட்டதில், மூலனுார் தி.மு.க. பேரூராட்சி அவைத்தலைவர் விஸ்வநாதன் வீட்டில், 40.79 லட்சம் ரூபாய், பேரூராட்சி 6-வது வார்டு கிளை செயலர் செல்வராஜ் வீட்டில், 7.63 லட்சம் ரூபாய் என மொத்தம், 48.42 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-4842-lakh-seized-from-dmk-functionaries-homes-flying-squad-action




